தூங்காவனம் இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பளித்த கமல்?

Bookmark and Share

தூங்காவனம் இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பளித்த கமல்?

கமல் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘தூங்காவனம்’. இப்படத்தை கமலிடம் நீண்ட காலமாக உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த ராஜேஷ் எம் செல்வா என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ‘மன்மதன் அம்பு’ படத்திற்கு பிறகு கமலும்-திரிஷாவும் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்கள். 

இப்படத்தை தொடர்ந்து, கமல் இயக்குனர் மௌலி இயக்கத்தில் நடிக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. ஆனால், தற்போது ‘தூங்காவனம்’ இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்திலேயே கமல் மீண்டும் நடிக்கப் போவதாக செய்தி வந்துள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதையை மட்டும் மௌலி எழுதப் போவதாகவும் கூறப்படுகிறது. 

எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ‘உத்தமவில்லன்’ தோல்விக்கு பிரதிபலனாக இப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கமல் இந்நிறுவனத்துக்கு வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

‘தூங்காவனம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. தற்போது, இப்படத்திற்கான இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டிரைலரை வருகிற செப்டம்பர் 16-ந் தேதி வெளியிடவிருக்கிறார்கள். ஜிப்ரான் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.


Post your comment





Related News
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!
தலாய் லாமாவை சந்தித்த கமல்!
என் திறமைக்கு கிடைத்த விருதை திருப்பி கொடுத்து என்ன சாதிப்பீர்கள்? - கமல்
தனது பிறந்தநாளில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!
கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா?
கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேச பேச்சு!
தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்!
கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு
இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்
புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions