ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!

Bookmark and Share

ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் நேற்று மதியம் சந்திரபாபு நாயுடுவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். 

பின்னர் கமலஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது, “அமராவதி தலைநகர் அடிக்கல் நாட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது. அப்போது என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே இப்போது முதல்– மந்திரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். 

‘தூங்காவனம்’ தெலுங்கு திரைப்படத்தின் சிறப்பு காட்சி விஜயவாடாவில் திரையிட திட்டமிட்டு உள்ளேன். படத்தை பார்க்க சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்து உள்ளேன்.

அவர் சம்மதம் தெரிவித்து உள்ளார். இதேநாளில் ஐதராபாத்திலும் சிறப்பு காட்சி திரையிட உள்ளது. தெலுங்கானா முதல்– மந்திரி சந்திரசேகரராவ் பங்கேற்க அழைப்பு விடுத்து உள்ளேன். 

சிறப்பு காட்சி திரையிடும் நாளில் படத்தில் நடித்த நடிகர்– நடிகைகள், திரைப்படக் குழுவினர் அனைவரும் பங்கேற்பார்கள். அவர்கள் பங்கேற்க வசதியாக விஜயவாடா, ஐதராபாத்தில் 6 மணி நேர இடைவெளியில் சிறப்பு காட்சி திரையிட ஏற்பாடு செய்து உள்ளேன்” என்றார் கமல்.

அதன் பின் கமலஹாசனுக்கு சந்திரபாபு நாயுடு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

 


Post your comment





Related News
தலாய் லாமாவை சந்தித்த கமல்!
என் திறமைக்கு கிடைத்த விருதை திருப்பி கொடுத்து என்ன சாதிப்பீர்கள்? - கமல்
தனது பிறந்தநாளில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!
கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா?
கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேச பேச்சு!
தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்!
கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு
இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்
புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்!
ரஜினி, கமல் விஷாலை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை - சரத்குமார் அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions