கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேச பேச்சு!

Bookmark and Share

கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேச பேச்சு!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளதால் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் விஷால் தலைமையிலான இரு அணியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோடம்பாக்கத்தில் சரத்குமார் அணியினரும், கே.கே.நகரில் விஷால் அணியினரும், திரைப்பட நடிகர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

கோடம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசுகையில், "எனது அப்பா எம்.ஆர்.ராதா நடிகர் சங்கத்திற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இப்போதுள்ள எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கத்தின் வரலாறு தெரியவில்லை.

தற்போது ஒரு பூச்சிதான் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நான் தற்போது மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். சண்டைக்கு மேல் ஒரு பூச்சி இருந்தால் அதை தட்டிவிட்டு விடுவோம். அதே பூச்சி கழுத்தில் உட்கார்ந்து கடித்தால் அதை நசுக்கத்தானே செய்வோம். 

அதேபோல், ஒரு மோசமான பூச்சி எனது பேண்ட்டுக்குள் நுழைந்து கடித்தால், இங்கு எனது பேண்டை கழற்ற முடியாது. இங்கிருந்து வெளியே சென்றதும், அந்த பூச்சியை பிடித்து, நீதானே கடித்தாய் எனக் கூறி அதை நசுக்கிவிடுவேன்.

அதேபோல், 18ஆம் தேதி இரவு வரட்டும், அனைவரையும் நசுக்கி விடுவேன்'' என மிகவும் ஆவேசமாக கூறினார். (நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து  தங்கள் தரப்புக்கு குடைச்சல் கொடுத்த பூச்சி முருகனையே மறைமுகமாக ராதாரவி குறிப்பிட்டார்)

மேலும் பேசுகையில், " கமலை பற்றி விமர்சிக்கலாமா என்று கேட்கிறார்கள். கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா?  கமலும், நானும் அரை டிரவுசர் காலத்திலேயே நண்பர்கள்.

இருவரும் மாறி மாறி கெட்டவார்த்தையில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வோம். சினிமாவுக்கு யாரும் நிரந்தரம் கிடையாது"  என்றும் ஆவேசமாக கூறினார்.


Post your comment





Related News
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!
தலாய் லாமாவை சந்தித்த கமல்!
என் திறமைக்கு கிடைத்த விருதை திருப்பி கொடுத்து என்ன சாதிப்பீர்கள்? - கமல்
தனது பிறந்தநாளில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!
கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா?
தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்!
கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு
இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்
புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்!
ரஜினி, கமல் விஷாலை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை - சரத்குமார் அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions