புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்!

Bookmark and Share

புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்!

கமல் ‘தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களில் நடித்து அசத்தினார். அவர் படத்துக்கு படம் புதுப்புது கெட்டப்பில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘உத்தமவில்லன்’ படத்தில் மீசை இல்லாமலிம், ‘பாபநாசம்’ படத்தில் கட்டை மீசை உடனும் நடித்துள்ளார். அடுத்து ‘தூங்காவனம்’ படத்தில் கொஞ்சம் தாடி, முறுக்கிய சிறு மீசை என மாறினார். 

‘தூங்காவனம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், ‘இனி எனது படங்கள் தொடர்ந்து வெளியாகும். அடுத்த படத்துக்கான வேலைகள் தொடங்கி விட்டது. படப்பிடிப்புக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டு விட்டன’ என்று கூறினார். 

புதிய படத்துக்காக கமல் தனது கெட்டப்பை நீண்ட முறுக்கு மீசையுடன் மாற்றி இருக்கிறார். ‘தூங்காவனம்’ தெலுங்கில் ‘சிகட்டி ராஜ்யம்’ என்ற பெயரில் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் வெளிவரவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் நீண்ட மீசையுடன் கமல் கலந்துக்கொண்டார்.


Post your comment





Related News
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!
தலாய் லாமாவை சந்தித்த கமல்!
என் திறமைக்கு கிடைத்த விருதை திருப்பி கொடுத்து என்ன சாதிப்பீர்கள்? - கமல்
தனது பிறந்தநாளில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!
கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா?
கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேச பேச்சு!
தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்!
கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு
இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்
ரஜினி, கமல் விஷாலை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை - சரத்குமார் அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions