மீடியாவைச் சந்திக்கவிருக்கும் தூங்காவனம் கமல்!

Bookmark and Share

மீடியாவைச் சந்திக்கவிருக்கும் தூங்காவனம் கமல்!

பாபநாசம் படத்தின் வெற்றிக்குப் பின் கமல்ஹாசன் நடிப்பில் வரும் தீபாவளிக்கு எதிர்பார்க்கப்படும் படம் தூங்காவனம். கமல்ஹாசனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இப்ப்டத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் மிகவும் குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்தின் ஆரம்ப விழாவையும், பத்திரிகையாளர் சந்திப்பையும் கடந்த மே மாதக் கடைசியில் ஐதராபாத்தில் நடத்தினார் கமல்ஹாசன்.

அதன் பின் தமிழில் எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் இந்தப் படத்திற்காக நடத்தவில்லை. தூங்காவனம் படத்திற்காக நாளை சென்னையில், முதல் முறையாக பத்திரிகையாளர்களை கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சந்திக்க உள்ளனர்.

இதற்கு முன் பாபநாசம் படத்தின் வெற்றிக்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அப்படக் குழுவினருடன் நன்றி தெரிவித்த கமல்ஹாசன், இரண்டு மாத இடைவெளிக்குள் மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions