மோகன்லாலுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

Bookmark and Share

மோகன்லாலுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

பாபநாசம் படம் வெளிவந்ததும் கமல்ஹாசனையும், மோகன்லாலையும் ஒப்பிட்டு பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்கள்.

அதோடு, சில ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த்தான் நடித்திருக்க வேண்டும். ஆனால், படத்தில் போலீசிடம் அடிவாங்குவது போல் காட்சிகள் இருப்பதால், அதை காட்சிகளை ரஜினி ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அதனால் ரஜினி நடிக்கவில்லை என்றும் தங்கள் பங்கிற்கு ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டார்கள்.

இவையிரண்டுக்கும் சேர்த்துமான ஒரு பதிலை நேற்று நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசினார். “நல்ல நம்பிக்கையுள்ள கலைஞனால்தான் இன்னொரு நடிகனைப் பாராட்ட முடியும்.

மோகன்லால் அவர்கள் சொன்னதாக கேள்விப்பட்டது, சில நண்பர்களும் அது பற்றி சொன்னார்கள். இந்தப் படத்தை தமிழில் படமாக்கினால் என் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் சொல்லியிருக்கிறார். அந்தப் பெருந்தன்மைக்காகவும், பரிந்துரைக்காகவும் நான் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்,” என கமல்ஹாசன் பேசினார்.

ஒரே பதிலில் பல கேள்விகளுக்கு பதிலளித்து விட்டார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடித்தால்தான் நன்றாக இருக்குமென ஒரிஜனல் படத்தில் நடித்த நாயகனே சொல்லிவிட்ட பிறகு ரஜினிகாந்த் நடிப்பது பற்றிய பேச்சே தேவையில்லை. அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் பற்றி மோகன்லால் எப்படி நினைத்திருக்கிறார் என்பதும் அவர் பரிந்துரைத்ததிலிருந்தும் விளங்கும்.


Post your comment





Related News
எங்க அண்ணன் ரஜினி பார்த்துக்கொள்வார்- கமல்ஹாசன் உருக்கம்
இன்றைய இளம் தலைமுறையினரையும் கவர்ந்தவர் எம்.எஸ்.வி.: கமல்ஹாசன்
சாதியை போற்றும் படங்களில் நடிக்கமாட்டேன்: கமல்ஹாசன் பேட்டி
கமல்ஹாசனால் முடிவது, ரஜினிகாந்தால் முடியாதது ஏன்.?
வினய் சொன்னது ரொம்ப சரியானது தான்-கமல்ஹாசன்..!
ஹாலிவுட்டில் இறங்கும் கமலின் ஜோடியாகும் அதிஸ்ர 7வயது சிறுமி!
என்னுடைய ரசிகன் கமலஹாசன் -டெல்லி கணேஷ் !
ரஜனி கமல் கலந்து கொள்ளும் சிரஞ்சீவி மகன் கல்யாணம்
விஸ்வரூபம் படத்துக்காக கதக் கத்துகிட்டு பெண்மை மிளிர காணப்படும் கமலஹாசன்!
திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்கும் உலகநாயகன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions