இன்றைய இளம் தலைமுறையினரையும் கவர்ந்தவர் எம்.எஸ்.வி.: கமல்ஹாசன்

Bookmark and Share

இன்றைய இளம் தலைமுறையினரையும் கவர்ந்தவர் எம்.எஸ்.வி.: கமல்ஹாசன்

ஆயிரத்து இருநூறு படங்களுக்கு இசையமைத்து திரையுலக வரலாற்றில் நீங்காத இடம்பிடித்து இன்று சென்னையில் காலமான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.எஸ்.வி. அவர்கள் பிரிக்க முடியாத வகையில் தமிழ் திரையுலக வரலாற்றோடு ஒன்றிவிட்டவர். தமிழ் மற்றும் தென்னிந்திய கலாசாரச் சித்தரிப்பின் அங்கம் அவர். எம்எஸ்வி பலரின் வாழ்வின் பின்னணி இசையாகி விட்டவர்.

ரசிகர்கள் அவரின் இசையுடன் தங்கள் வாழ்வின் இனிமையான பக்கங்களையும் திரும்பி பார்ப்பார்கள். இன்றைய தலைமுறைகளாலும் எம்.எஸ்.வி. ரசிக்கப்படுகிறார். என் மகள் ஸ்ருதி அமெரிக்காவில் இசை படித்துவிட்டு சென்னை வந்தவுடன் எம்.எஸ்.வி.-யை சந்திக்க விரும்பினார். பின்னர் அவரின் ரசிகையாக மாறிவிட்டார்.

எம்.எஸ்.வி அவர்களின் தோள்களை புகழ் அலங்கரித்தது. தன் புகழையும் பெருமையையும் பெரிதுப்படுத்தாமல் பிற கலைஞர்களை வயது வித்தியாசம் பார்க்காமல் அவர்களை அவர் அடிக்கடி புகழ்வதுண்டு. அவரது உடலை மட்டுமே நாம் இழந்திருக்கிறோம்.

அவரது இசை எப்போதும் நம்மோடிருக்கும். தன் இசையால் என் வாழ்வுக்குச் செறிவூட்டிய அவருக்கு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
எங்க அண்ணன் ரஜினி பார்த்துக்கொள்வார்- கமல்ஹாசன் உருக்கம்
மோகன்லாலுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்
சாதியை போற்றும் படங்களில் நடிக்கமாட்டேன்: கமல்ஹாசன் பேட்டி
கமல்ஹாசனால் முடிவது, ரஜினிகாந்தால் முடியாதது ஏன்.?
வினய் சொன்னது ரொம்ப சரியானது தான்-கமல்ஹாசன்..!
ஹாலிவுட்டில் இறங்கும் கமலின் ஜோடியாகும் அதிஸ்ர 7வயது சிறுமி!
என்னுடைய ரசிகன் கமலஹாசன் -டெல்லி கணேஷ் !
ரஜனி கமல் கலந்து கொள்ளும் சிரஞ்சீவி மகன் கல்யாணம்
விஸ்வரூபம் படத்துக்காக கதக் கத்துகிட்டு பெண்மை மிளிர காணப்படும் கமலஹாசன்!
திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்கும் உலகநாயகன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions