மலையாளி சங்கம் சார்பில் புற்றுநோய் மையத்திற்கு ரூ.25 லட்சம்: கமல்ஹாசன் வழங்கினார்

Bookmark and Share

மலையாளி சங்கம் சார்பில் புற்றுநோய் மையத்திற்கு ரூ.25 லட்சம்: கமல்ஹாசன் வழங்கினார்

சென்னை அடையாறில் இயங்கி வரும் புற்று நோய் மையத்தில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தரமான சிகிச்சை வழங்குவதுடன் நோயாளிகளின் வருமானத்திற்கு ஏற்ப குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மிகப்பெரிய மருத்துவமனைக்கு இணையான பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ள இந்த மருத்துவமனைக்கு அரசு சார்பில் ஆண்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இதே போல் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், பொது மக்களும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அகில இந்திய மலையாளிகள் சங்கம் சார்பில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை புற்றுநோய் சிகிச்சை மைய தலைவர் டாக்டர் சாந்தாவிடம், மலையாளிகள் சங்கத்தின் தலைவர் கோகுலம் கோபாலன் மற்றும் தூதுவர் கமல்ஹாசன் வழங்கினர்.

புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு இந்த நிதியுதவியை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions