எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீளவேண்டும்: கமல்

Bookmark and Share

எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீளவேண்டும்: கமல்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று திரையுலகில் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் கமல். இவர்  திரையில் செய்த சாதனைகள் ஏராளம். அதேபோல் சினிமாவில் நடிகர், கதாசிரியர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டனர். இவருக்கு நேற்று 63-வது பிறந்தநாள்.

கமலின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து அதை ஒரு பெரிய விழாவாக எடுத்துக் கொண்டாடுவார்கள். கமலும் தனது பிறந்தநாளின் போது ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இந்த ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, ரசிகர்களும் அவரது வேண்டுகோளை ஏற்று கமலின் பிறந்தநாளை தவிர்த்தனர். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் கமலுக்கு ஏராளமானோர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கு கமல் நன்றி தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, அன்பு ரசிகர்களுக்கும் மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்களுக்கும் மேலும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions