ரஜினியை தொடர்ந்து மோடியை பாராட்டிய கமல்

Bookmark and Share

ரஜினியை தொடர்ந்து மோடியை பாராட்டிய கமல்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு காட்டுத்தீ போல நாடெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் இதைப்பற்றிய பேச்சுத்தான் இருக்கிறது. மோடியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், பலரும் பாராட்டி வருகின்றனர்.

நடிகர்கள் ரஜினி, விஷால், தனுஷ் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், கமலும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சல்யூட் மிஸ்டர் மோடி. இந்த நடவடிக்கையை அரசியல் கட்சிகள் கொண்டாட வேண்டும். குறிப்பாக, நேர்மையாக வரி கட்டுபவர்கள் என்று கூறியுள்ளார்.

விஷால் கூறும்போது, இதை ஏற்றுக்கொள்ள கொஞ்ச காலமாகும். புதிய இந்தியாவை கொண்டு வாருங்கள் மோடிஜி என்று கூறியுள்ளார். சித்தார்த் கூறும்போது, டியர் மோடி, நீங்கள் ஒரு ஜாம்பவான். தேசப்பக்தி உள்ள அனைத்து இந்தியனும் இன்று இரவு நன்றாக தூங்குவான். இந்த நாளுக்காக நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், லட்சுமி ராமகிருஷ்ணன், தனுஷ் உள்ளிட்டோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். கோலிவுட் மட்டுமில்லாது, டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகினரும் மோடியின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions