உலக நாயகன் கமலின் புது படத்தை இயக்கும் மலையாள இயக்குனர்!

Bookmark and Share

உலக நாயகன் கமலின் புது படத்தை இயக்கும் மலையாள இயக்குனர்!

தூங்காவனம் படத்தில் குறுந்தாடியுடன் இருந்த கமல் இந்த படத்தை முடித்த கையோடு அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். புதிய படத்துக்காக கெட்டப்பை மாற்றி இருக்கிறார்.

தற்போது முரட்டு மீசையுடன் காட்சி அளிக்கிறார். கமலின் புதிய படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயார் ஆகிறது. இந்த படத்தை பிரபல மலையாள பட இயக்குனர் ராஜீவ்குமார் இயக்குகிறார். 1989–ல் இவர் இயக்கத்தில் கமல் நடித்த ‘சாணக்கியன்’ மலையாளப் படம் தமிழிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கிறார்.

கமலுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் யார் என்பதும், தொழில் நுட்ப பணியாளர்கள் பற்றியும் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழ்– மலையாளத்தில் தயாராகும் கமலின் புதிய படத்தின் கதை மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.

இந்த படத்தையும் குறைந்த நாட்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்க இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions