நட்டியின் கதம் கதம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த கமல்

Bookmark and Share

நட்டியின் கதம் கதம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த கமல்

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக களம் புகுந்த 'நட்டி' என்கிற நட்ராஜ், நடிப்பிலும் முத்திரை பதித்து வருவதுடன் பாலிவுட்டிலும் ஒளிப்பதிவில் கலக்கி வருகிறார். தமிழில் 'நட்டி' கதாநாயகனாக நடித்த 'கதம் கதம்' திரைப்படம் நேற்று ரிலீசானது.

இதையொட்டி நட்டியின் 'கதம் கதம்' வெற்றி பெற கலைஞானி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நட்டியின் படம் வெற்றி பெற கமல் வாழ்த்துவது என்பது வசிஷ்டர் வாயால் பாராட்டு பெறுவதற்கு சமம்.

இயல்பான நடிப்பால் இளசுகளை கட்டிப்போடுவதில் 'நட்டி படு சுட்டி'. மிளகாயில் மிரட்டல் அடி, சதுரங்க வேட்டையில் சரவெடி என பட்டையை கிளப்பும் நட்டிக்கு கதம் கதம், போலீஸ் வேட்டையாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்படத்தின் இயக்குனர் பாபு தூயவன், தேவர் பிலிம்சுக்கு கதை எழுதிய தூயவனின் மகனாவார். பாபு தூயவனுக்கும் வாழ்த்துகளை கூறிய கமல், அவரது தந்தை தேவர் பிலிம்சுக்கு கதை எழுதிய காலத்தில் அக்குழுவில் தானும் இணைய முயன்றதாக தெரிவித்தார்.

எந்த சமயத்தில் கதை வேண்டும் என்று கேட்டாலும் இன்ஸ்டன்ட்டாக எழுதும் திறமை மிக்கவர் தூயவன் என்று கூறியுள்ள கமல், அவரை போலவே பாபு தூயவனும் நிச்சயமாக திறமை மிக்கவராக இருப்பார் என்றும் கூறியுள்ளார். 

 


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions