மலையாள எழுத்தாளரை கூண்டில் ஏற்றுகிறார் கமல்!

Bookmark and Share

மலையாள எழுத்தாளரை கூண்டில் ஏற்றுகிறார் கமல்!

சமீபகாலமாக பிரபல டைரக்டர்கள், நடிகர்களின் படங்கள் வளர்ந்து கொண்டிருக்கும்போதோ அல்லது படம் வெளியான பிறகோ அந்த கதை என்னுடையது என்று அப்படத்துக்கு சம்பந்தமே இல்லாத நபர்கள் போர்க்கொடி பிடித்து தயாரிப்பாளர்களிடம் பணம் பறிப்பது தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக, விஜய்யின் கத்தி கதை விவகாரம்கூட இன்னமும் தீர்ந்தபாடில்லை. இந்த நிலையில், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் இப்போது கமல் நடித்துள்ளார்.

பாபநாசம் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தின் கதை தனது ஒரு மழைக்காலத்து என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நாவலின் ஆசிரியர் கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி அதை தள்ளுபடி செய்து விட்டார்.

அதனால் அதுவரை நிறுத்தி வைத்திருந்த பாபநாசம் படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது மீண்டும் துரிதமாக தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன், பாபநாசம் கதைக்கு எதிராக தொடரப்பட்ட அந்த வழக்கு பற்றி கூறுகையில், இதுபோன்று மற்றவர்களின் கதையை தங்களுக்கு சொந்தமானதாக சொல்லிக்கொண்டு நீதிமன்றத்தை நாடுவது வழக்கமாகி விட்டது.

இதை தொடரவிட்டால் எதிர்காலத்தில் படம் எடுப்பவர்கள் இன்னும் நிறைய இன்னல்களை சந்திக்க வேண்டியதிருக்கும்.அதனால் இப்போது நான் ஒரு விசயம் செய்யப்போகிறேன்.

அதாவது பாபநாசம் கதை என்னுடையது என்று வழக்கு போட்ட அந்த நபருக்கு எதிராக நான் அவர் மீது வழக்கு தொடரப்போகிறேன். அவரை கூண்டில் ஏற்றி அவர் செய்த தவறுக்கு பாடம் கற்பிக்கப்போகிறேன்.

அவரைப்பார்த்து இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மற்றவர்கள் பயப்பட வேண்டும். மேலும், நான் மட்டுமின்றி இந்த மாதிரி நபர்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மற்ற சினிமாக்காரர்களும் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். அப்போதுதான் தேவையில்லாமல் சினிமாக்காரர்களை மிரட்டும் இந்த நிலை மாறும் என்றார் கமல்.

 


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions