தேவர்மகனும், உத்தமவில்லனும் எனக்கு முக்கியமான படங்கள்! -கமல்

Bookmark and Share

தேவர்மகனும், உத்தமவில்லனும் எனக்கு முக்கியமான படங்கள்! -கமல்

விஸ்வரூபம் படத்தை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார் கமல். ஆனால் அந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த பிறகும் அப்படத்தை தயாரித்துள்ள ஆஸ்கர் பிலிம்ஸ் படத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறது.

இதுபற்றி இதற்கு முன்பு காரசாரமாக எதுவும் சொல்லாமல் இருந்த கமல், சமீபத்தில் நடந்த பிரஸ்மீட்டில், விஸ்வரூபம்-2 படத்தை எதற்காக வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள் என்று எனக்கே இன்னும் தெரியவில்லை என்று கூறினார்.

மேலும், உத்தமவில்லன் படத்தை ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் தொடங்கினோம். அந்த கதையை ரெடி பண்ணிவிட்டு ரமேஷ் அரவிந்தை இயக்கும்படி சொன்னேன். அதோடு எனது குருநாதர் கே.பாலசந்தர் அவர்களை எப்படியாவது ஒரு வேடத்தில் நடிக்க வைத்து விடவேண்டும் என்று கதை எழுதும்போதே திட்டமிட்டிருந்தேன். அதன்படி அவரையும் நடிக்க வைத்தேன்.

அந்த வகையில், என்னை சினிமாவில் ஆளாக்கியவரை என் படத்தில் நடிக்க வைத்த பெருமை எனக்கு கிடைத்தது. இதேபோல், சினிமாவில், சிறுவனாக நடிக்கத் தொடங்கியபோது சிவாஜி அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவன் நான்.

அவரது மடியில் அமரும் பாக்கியம் பெற்ற நான், பின்னர் அவருடன் தேவர் மகன் படத்தில் நடித்தேன். எனக்கு அப்பாவாக அவர் நடித்து என்னை பெருமைப்படுத்தினார். அந்த வகையில், எனது சினிமா பயணத்தில் சிவாஜிகணேசனுடன் நான் நடித்த தேவர்மகனும், கே.பாலசந்தருடன் நான் நடித்த உத்தமவில்லனும் எனக்கு முக்கியமான படங்களாகி விட்டன என்றார் கமல்.


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions