பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா

Bookmark and Share

பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா

நடிகர் கமல்ஹாசன் நடிகர், நடன கலைஞர், பாடகர், இயக்குனர் என பல பரிமாணங்கள் கொண்டு சினிமாவில் திறமைகள் காட்டி வருகிறார். ஏதோ சில சூழ்நிலைகள் அவருக்கு தடைக்கல்லாய் இருந்து வருகிறது. ஆனாலும் ஓயாமல் எதையாவது செய்து வருகிறார்.

பாகுபலி இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. ரூ 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் படம் மும்மடங்கை தாண்டி வசூல் சாதனை செய்தது. மேலும் பாகுபலி 2 அதே போல சாதனை நிகழ்த்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் அதே ரூ 150 கோடி பட்ஜெட்டில் கமல் 1997 ல் மருதநாயகம் என்னும் படத்தை இயக்கி நடிக்க தொடங்கினார். இதன் தொடக்க விழாவிற்கு கூட இங்கிலாந்து ராணி கலந்து கொண்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பட்ஜெட் பற்றக்குறையே இதற்கு முக்கிய காரணம் என்று சொன்ன கமல் படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.

அப்படி வந்திருந்தால் இதே பாகுபலி சாதனையை மருதநாயகம் செய்து தமிழ் சினிமாவை உலகமே திருப்பி பார்க்க வைத்திருக்கும்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions