
கடந்த தீபாவளி தினத்தன்றுதான் கமலின் தூங்காவனம், அஜீத்தின் வேதாளம் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின.
இரண்டு படங்களுக்குமே நல்ல பாசிட்டீவான ரிசல்ட்டு கிடைத்திருப்பதால் திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலும் தற்போதைய நிலவரப்படி ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இதற்கிடையே இதுவரையில்லாத வசூல் சாதனை என்று வழக்கம்போல் வெளியாகும் பில்டப் செய்திகளும் இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியானதைத் தொடர்ந்து வருகிற தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ரஜினியின் கபாலி படம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. மேலும், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59வது படமும் அதே நாளில் வெளியாகயிருப்பதாக இப்போது ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் உலவிக்கொண்டிருக்கிறது.
ஆனால், இதுபற்றி சம்பந்தப்பட்ட இரண்டு படங்களையுமே தயாரித்து வரும் படநிறுவனம் தரப்பில் விசாரித்தால், ரஜினி, விஜய் படங்கள் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. விஜய் படம் ரஜினி படத்துக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டாலும், தற்போது 70 சதவிகிதத்தை எட்டியிருக்கிறது. ஆனால் ரஜினியின் கபாலி படமோ, மலேசியாவில் ஒரே ஏரியாவில் தொடர்ச்சியாக படமாக்கப்பட்டு வருகிறது.
தீபாவளியை கொண்டாடகூட அவர்கள் யாருமே சென்னை வரவில்லை. மலேசியாவிலேயே கொண்டாடிவிட்டனர். ஆக, இடைவெளி கொடுக்காமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ரஜினி படம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி விடும் என்று தெரிகிறது. ஆனால், விஜய் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் இறுதிகட்டத்தை எட்டி விடும் என்பதால், அதற்கடுத்து போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாகவே வெளியாகிவிடும் என்கிறார்கள்.
Post your comment
Related News | |
![]() |