கமல்ஹாசனிடம் சிறந்த நடிகன் விருதை வாங்க வேண்டும்! தனுஷ்

Bookmark and Share

கமல்ஹாசனிடம் சிறந்த நடிகன் விருதை  வாங்க வேண்டும்! தனுஷ்

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் தூங்காவனம். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சத்யம் சினிமாவில் நடைபெற்றது.

த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், மதுஷாலினி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இந்த விழாவில் தனுஷ் பேசிய போது, நான் ஏராளமான விருதுகளை வங்கி உள்ளேன். ஆனால் சிறந்த நடிகருக்கான  விருதை உலகநாயகன் கமல் சாரிடம் இருந்து வாங்கவேண்டும் என கூறினார்.

விழாவின் போது தனுஷ், ஸ்ருதிஹாசன், வைரமுத்து, விஷால், பொன்வண்ணன், கருணாஸ், கிரேஸி மோகன், நடிகை லிஸி, த்ரிஷா, ஆர். கே செல்வமணி, டைரக்டர் பண்டிராஜ், ரியாஸ்கான் மற்றும் இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த படம் தீபாவாளிக்கு திரைக்கு வரவுள்ளது.

 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions