இந்திப் படத்தை இயக்கும் கமல்ஹாசன்: அமெரிக்கா, துபாய், லண்டனில் படப்பிடிப்பு

Bookmark and Share

இந்திப் படத்தை இயக்கும் கமல்ஹாசன்: அமெரிக்கா, துபாய், லண்டனில் படப்பிடிப்பு

நடிகர் கமல்ஹாசனின் கதை, இயக்கம் மற்றும் நடிப்பில் ’அமர் ஹைன்’ என்ற இந்திப்படத்தை தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ளன.

ஏக் துஜேகே லியே படத்தின் மூலம் இந்திப்பட உலகில் நேரடியாக (மொழிமாற்றம் அல்லாத மூலப்படம்) காலடி பதித்த உலக நாயகன் கமல்ஹாசன், பின்னர் சனம் தேரி கஸம், ஏ தோ கமால் ஹோகயா, ஜராசே ஜிந்தகி, சத்மா, சாச்சி 420 உள்ளிட்ட சில நேரடி இந்திப் படங்களில் நடித்துள்ளார்.

இவரது கதை இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘விஸ்வரூப்’ இந்திப்படம் நல்ல வசூலும், சிறந்த விமர்சனங்களையும் சம்பாதித்தது. இதைத்தொடர்ந்து, அரசியல், தாதாக்களின் நிழல் உலகம் மற்றும் நிதி விவகாரங்கள் ஆகிய கருவினை மையமாக வைத்து சுமார் ஆறாண்டு காலமாக கமல்ஹாசன் உருவாக்கியுள்ள புதிய கதையை ’அமர் ஹைன்’ என்ற பெயரில் மும்பையை சேர்ந்த விரேந்திரா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க சைப் அலிகானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தயாரிப்பாளர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கமல்ஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படபிடிப்பை வட இந்தியாவில் தொடங்கி, அமெரிக்கா, துபாய், லண்டன், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் பல பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions