
கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் நடிக்க வந்துவிட்டார்கள். மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் '7ம் அறிவு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இளைய மகள் அக்ஷரா ஹாசன் நாயகியாக அறிமுகமாகும் 'ஷமிதாப் ஹிந்திப் படம் நாளை வெளியாக உள்ளது.
கமல்ஹாசனின் திரையுலக அறிவும், அனுபவமும், ஆர்வமும் அனைவரும் அறிந்ததே. ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக, நடிகராக, பின்னணிப் பாடகராக, நடனத்திலும் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பவர்தான் கமல்ஹாசன்.
திரையுலகத்தினர் கூட அவரை ஒரு பல்கலைக்கழகம் என்றுதான் குறிப்பிடுவார்கள். அதே போலவே தன்னுடைய மகள்களுக்கும் திரைப்படங்களில் நடிப்பதையும் மீறி பல விஷயங்களிலும் ஆர்வம் செலுத்தும் அளவிற்கு வளர்த்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசன், தமிழில் நாயகியாக நடிப்பதற்கு முன்பே அப்பாவின் 'உன்னைப் போல் ஒருவன்' படத்திற்கு இசையமைத்திருந்தார். அதோடு ஸ்ருதி சிறந்த பாடகியும் கூட. தமிழிலும், ஹிந்தியிலும் பாடல்களைப் பாடி வருகிறார்.
இளையராஜா இசையில் 'ஷமிதாப்' படத்தில் கூட ஒரு ஹிட்டான பாடலைப் பாடியிருக்கிறார். ஸ்ருதிஹாசன் அவருடைய பிறந்த நாளை ஜனவரி 28ம் தேதியன்று கொண்டாடினார்.
அந்த பிறந்த நாள் பரிசாக அவருடைய அப்பா ஸ்ருதிக்கு 'ஸ்கிரிப்ட் ரைட்டிங்' சாப்ட்வேரையும், எழுதுவதற்கான பயிற்சி ஒன்றையும் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் கவிதைகள் கூட எழுதுபவர், ஆங்கிலத்தில் சில கவிதைகளை எழுதியிருக்கிறார். விரைவில் குறும்படங்களுக்கான கதையை எழுதப்போவதாக ஸ்ருதிஹாசன் சொல்லகிறார். சீக்கிரமே ஸ்ருதிஹாசனை ஒரு இயக்குனராகவும் பார்க்கலாம்.
Post your comment