ஸ்ருதிக்கு தந்தை கமல் சொன்ன காதல் கதை

Bookmark and Share

ஸ்ருதிக்கு தந்தை கமல் சொன்ன காதல் கதை

இந்த காலத்து காதலில், காதலர்கள் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது தொழில்நுட்பம். ஆனால், இந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பழைய காலத்து காதல் எப்படி இருந்தது என்பதை எனது தந்தை கமல்ஹாசன் சொல்லி கேள்விப்பட்ட போது வியப்பாக இருந்தது என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், போன் வசதி இல்லாத அந்த காலத்து காதலர்கள் சந்தித்து பேசுவது சுலபமானதாக இருக்கவில்லை. நேரில் பேசித்தான் காதலை வளர்த்தார்கள். அருகருகே நின்று பேசும்போது ஒருவருக்கொருவர் அன்பான வார்த்தைகளை பரிமாறிக்கொள்வார்கள்.

அப்போது அவர்களின் முகபாவங்கள் மாறுவதையும் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் நேரில் பார்ப்பது அலாதியான சுகமானது. உயிரோட்டமான காதலாகவும் அது இருந்தது. அவற்றை எல்லாம் பார்த்துதான் நிறைய காதல் கதைகள் உருவானதாக என் தந்தை கூறி இருக்கிறார்.

அதன்பிறகு வீட்டில் இருக்கும் நிலையான தொலைபேசி க்கு காதல் மாறியது. போனில் மணி அடிக்கும்போது அதை அம்மாவோ, அப்பாவோ எடுத்து விடக்கூடாது என்று மனம் பதைபதைக்கும். பயமும் இருக்கும்.

எப்போதும் போன் பக்கத்திலேயே காதலனும் காதலியும் போன் அழைப்புகளை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். அது சுவாரஸ்யமானதாக இருக்கும். அது ஒரு காலம். செல்போன், வாட்ஸ்-அப் காதலுக்கு மாறி உள்ள இந்த காலத்து இளைஞர்கள் பழைய காலத்தில் இருந்த அந்த ஜீவனுள்ள காதலை இழந்து விட்டார்கள் என்றுதான் நான் சொல்லுவேன். எனக்கு பழைய காலத்து காதல் தான் பிடித்து இருக்கிறது- என்றார்.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions