உலக நாயகனின் புதிய படத்தின் தலைப்பு உறுதியானது

Bookmark and Share

உலக நாயகனின் புதிய படத்தின் தலைப்பு உறுதியானது

 டி.ராஜீவ்குமார் 1989-ம் ஆண்டு கமல் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘சாணக்யன்’ என்ற படத்தை இயக்கியவர்.

26 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் உருவாகவிருக்கிறது.

குடும்ப பின்னணியில் நகைச்சுவை சார்ந்த படமாக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா, பாலிவுட் நடிகை ஜரீனா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். 
இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து தற்போது இப்படத்திற்கு தலைப்பு தேர்வு செய்துள்ளனர்.

தமிழுக்கு ‘அப்பா அம்மா விளையாட்டு’ என்றும் தெலுங்கு ‘அம்மா நானா ஆட்டா’ என்றும் தலைப்பு தேர்வு செய்துள்ளனர். மலையாளம், இந்தி மொழிகளுக்கு தலைப்பு தேர்வு செய்யும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவிருக்கின்றனர். பெரும்பாலான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கவுள்ளனர். இப்படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் கமல்ஹாசனே தயாரிக்கிறார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions