கமல்ஹாசன் படத்தில் மதுஷாலினி

Bookmark and Share

கமல்ஹாசன் படத்தில் மதுஷாலினி

இருமதுஷாலினி என்ற நாயகியை ரசிகர்களுக்கு ஞாபகமிருக்கலாம் அல்லது மறந்தும் போயிருக்கலாம். பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தவர்தான் இந்த மதுஷாலினி. அதன் பின் வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராம்கோபால் வர்மா இயக்கிய 'டிபார்ட்மென்ட்' படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இப்போது தெலுங்கில்தான் ஓரளவிற்கு நடித்துக் கொண்டிருக்கிறார். மதுஷாலினிக்கு பெரும் அதிர்ஷ்டமாக கமல்ஹாசன் நாயகனாக நடித்து வரும் 'தூங்காவனம்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

இந்தப் படத்தில் த்ரிஷாதான் நாயகியாக நடிக்கிறார். இருந்தாலும் மதுஷாலினிக்கும் நல்ல கதாபாத்திரம்தான் என்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக அவர் நடித்து வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'தூங்காவனம்' படத்தில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக நட்சத்திரங்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், படம் ஆரம்பமாகும் போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நட்சத்திரங்களாக ந்தார்கள். இனி, அடிக்கடி புதுப் புது நட்சத்திரங்கள் சேர்ந்த அறிவிப்புகள் வந்து கொண்டேயிருக்கலாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions