கமலின் பெரிய மனசு : நெகிழும் எம்.எஸ்.பாஸ்கர்

Bookmark and Share

கமலின் பெரிய மனசு : நெகிழும் எம்.எஸ்.பாஸ்கர்

மே மாதத்தில் மட்டும் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடித்து ஆறு படங்கள் வந்துள்ளன. உத்தமவில்லன், வை ராஜா வை, இந்தியா பாகிஸ்தான், 36 வயதினிலே, டிமாண்டி காலனி, விந்தை என ஆறு படங்கள் வெளியாகியுள்ளன.

நகைச்சுவை நடிகர் என்பதிலிருந்து குணச்சித்திர நடிகர் என்கிற படியேறி இருப்பதாகக் கூறும் அவர், கமலுடன் உத்தமவில்லன் படத்தில் படம் முழுக்க வரும் நடிகரின் மேனேஜர் பாத்திரத்தில் நடித்து இருப்பார்.  அதில் நடிக்கும் போது யாரை மனதில் வைத்து நடித்தீர்கள் என்றால் நடிகர் கமலின் மேனேஜர் டி.என். சுப்ரமணியம் அவர்களையே மனதில் வைத்து நடித்ததாக கூறுகிறார்.

இப்போது வைகை எக்ஸ்பிரஸ், பாபநாசம், நட்பதிகாரம் 79, உள்ளிட்ட  10 படங்களில் நடித்து வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.மீண்டும் பாபநாசத்தில் கமலுடன்  படம் முழுக்க வரும் ஓட்டல் முதலாளியாக முழுநீள வேடம் ஏற்றுள்ளார். அதில் நெல்லைபாஷை பேசுகிறார்.

கமலுடன் நடித்த அனுபவம் பற்றிப் பேசும் போது எம்.எஸ்.பாஸ்கர். உணர்ச்சி வசப்பட்டு நெகிழ்கிறார். "கமல் அண்ணாவுடன் நடிப்பது பெருமையான விஷயம் மட்டுமல்ல கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கூட. அவர் பெரிய நடிகர் மட்டுமல்ல உடன் நடிக்கும் நடிகர்களுக்கும் நடிக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் கொடுக்கும் பெருந்தன்மையான நடிகரும் கூட.

அவரைப் புரிந்து கொண்டு நடித்தால் அவரிடம் வாய்ப்பும் பாராட்டும் வாங்க முடியும் நல்ல பெயரும் எடுக்க முடியும். பலபேர் மத்தியில் அவர் ஒரு மேடையில் இந்த தம்பி எம்.எஸ்.பாஸ்கர் என்னில் பாதி என்று பழம்பெரும் நடிகர்கள் பாலையா, சுப்பையாவுடன் என்னையும் ஒப்பிட்டும் பேசினார். கேட்டுவிட்டு மகிழ்ந்து நெகிழ்ந்து போய் விட்டேன். இதைவிட எனக்கு என்ன விருது வேண்டும்?" என்கிறார் பூரிப்புடன்.

 


Post your comment





Related News
சமூக வலைத்தளத்தில் எனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - ஸ்வரா பாஸ்கர்
எம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்
அரவிந்த்சாமி நடிக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
டைரக்டர் பாலியல் தொல்லை கொடுத்தார்: தனுஷ் பட நடிகை புகார்
இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
எம்.எஸ்.பாஸ்கரை அவமானப்படுத்திய முன்னணி இயக்குனர்- அதிர்ச்சி சம்பவம்
விஜய் அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் மாறிவிட்டார்- பிரபல நடிகர் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions