ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்

Bookmark and Share

ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடித்து வெளிவந்துள்ள பாபநாசம் திரைப்படம் வெளியான எல்லா ஊர்களிலும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் நடித்துள்ள ஒரு படத்தை குடும்பத்தினருடன் அனைவரும் வந்து பார்த்து நீண்ட நாட்களாகிறது என்ற குறையை இந்தப் படம் போக்கியிருக்கிறது. ஒரு பொறுப்பான அப்பாவாக சுயம்புலிங்கம் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் நடிப்பை ரசிகர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் பாராட்டிப் பேசி வருகிறார்கள்.

பாபநாசம் படம் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்தான் என்பது அனைவருக்கும் தெரியும். மீண்டும் இப்படி ரீமேக் படங்களில் நடிப்பீர்களா என கமல்ஹாசனிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், “ ரீமேக் என்பதற்கு வெற்றி மட்டுமே ஒரு அளவு கோல் அல்ல. மற்ற மொழிகளில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். 

ஆனால், அதில் விஷயமுள்ள படங்களை மட்டுமே ரீமேக் செய்தால் வெற்றி பெற முடியும். ஏதோ வெற்றி பெற்று விட்டது என்ற காரணத்திற்காக மட்டுமே ஒரு படத்தை ரீமேக் செய்துவிடக் கூடாது. த்ரிஷ்யம் படத்தில் அதன் கதையும் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் விதத்தில் இருந்தது. அதனால்தான் அதன் ரீமேக்கில் நடித்தேன். இன்னும் பெங்காலி உட்பட பல மொழிகளில் எவ்வளவோ நல்ல படங்கள் இருக்கிறது. அவற்றை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு,” என்றார்.

கமல்ஹாசன் தற்போது எடுத்துக் கொண்டிருக்கும் தூங்காவனம் படமே ஸ்லீப்லெஸ் நைட்ஸ் என்ற பிரெஞ்சு மொழித் திரைப்படத்தின் ரீமேக்தான் என ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன. வெளிநாட்டுப் படங்களை ரீமேக் செய்வது கமல்ஹாசனுக்குப் புதிதல்லவே...


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions