சசிகலாவை கலாய்த்த கமல்! பிக்பாஸில் அரசியல்

Bookmark and Share

சசிகலாவை கலாய்த்த கமல்! பிக்பாஸில் அரசியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிருக்கிறார். கமல் என்றாலே அவரது பேச்சில் நக்கலும் நையாண்டியும் இருக்கும். இதை பிக்பாஸின் முதல் சீசனிலியே பார்த்திருப்போம்.

அதன்பின் கமல் அரசியல் பிரவேசம் செய்தார். அதன்பின் அவரது கிண்டலான பேச்சுக்கள் அனைத்தும் அரசியல் பிரமுகர்களை நோக்கியே இருந்தது. இதை பிக்பாஸ் 2வின் தொடக்க விழாவின் போதும் பார்க்க முடிந்தது. தொடக்க விழாவின் போது பிக்பாஸ் வீட்டிலிருந்த சிறையை பார்த்து, ’என்ன சிறையில் ஃபேன் இல்லை, இது உண்மையிலேயே சிறை தானா?’ என கேட்க அங்கிருந்த அனைவரின் சிரிப்பு சத்தமும் காதை பிளந்தது.

சசிகலா பெங்களூரு அக்ரஹாரா சிறையில் சகல வசதிகளுடனும் இருப்பதை இதன் மூலம் நக்கலாக சொல்லியிருக்கி்றார். மேலும் கடந்த சீசனில் ‘வெளியே ஃபைவ் ஸ்டார் சிறை இருக்கு’ என்று கூறியது நினைவிருக்கலாம். இந்த சீசன் முழூவதும் அரசியல் பேச்சு தொடரும் என்பதன் தொடக்கமாக இது கருதப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions