நானும் தமிழ் பொறுக்கிதான் - சு.சாமிக்கு பதிலடி கொடுத்த கமல்

Bookmark and Share

நானும் தமிழ் பொறுக்கிதான் - சு.சாமிக்கு பதிலடி கொடுத்த கமல்

ஆம், நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கி தான் என்று ஒளிப்பதிவாளர் இணையதளத் தொடங்க விழாவில் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்துக்கான புதிய இணையதளம் தொடங்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தலைவர் பி.சி.ஸ்ரீராம், செயலாளர் பி.கண்ணன், பொருளாளர் ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட நிர்வாகிகளோடு பல முன்னணி ஒளிப்பதிவாளர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த இணையதள துவக்கவிழாவில் இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இணையத்தை துவக்கி வைத்தார்கள்

இந்த விழாவில் பேசிய கமல்,”யாரோ ஒருவர் தமிழர்கள் எல்லாம் பொறுக்கிகள் என பேசியிருக்கிறார்.ஆமாம்.நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்.  எங்கே சென்று பொறுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.  ஆனால் கண்டிப்பாக டெல்லி சென்று பொறுக்க மாட்டேன்.  என்னடா இவன் திடீரென அரசியல் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். நான் பேசுவது அரசியல் அல்ல.தன்மானம்.

ஒரு வேளை நான் சினிமாவுக்கு வராமல், கலெக்டராகவோ, இன்ஜினியராகவோ இருந்திருந்தால் அலங்காநல்லூர் கிராமத்தில் இந்நேரம் நின்றிருப்பேன்.”என தெரிவித்தார்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டங்களை தொடர்ந்து ஆதரித்து வரும் கமல்ஹாசன், தமிழர்களை பொறுக்கிகள் என விமர்சித்த சுப்ரமணிய சாமிக்கு நல்ல பதிலடியை தந்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் எம் எஸ் பாஸ்கர் : நடிகர் நாசர்!
வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு! நடிகர் ஆர் கே யின் புது முயற்சி...
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
அஜித் படத்தில் சைலண்ட், விஜய் படத்தில் புதுமை- தன் அடுத்தடுத்த படம் குறித்து காஜல் அகர்வால்
தன்னை திட்டிய இயக்குனர் படத்திலேயே நடிக்கின்றாரா லாரன்ஸ்?
சிவகார்த்திகேயன் படத்துக்காக அதிரடி முடிவு எடுத்த சினேகா- ரசிகர்கள் வருத்தம்
தல அஜித்திற்கும், பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
அஜித் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர், தலக்கே இது பிடிக்காதே! மதுரையில் பரபரப்பு
பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்- புகார் கொடுத்த நாயகி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions