கமல் படங்களுக்கே முதலிடம் கொடுக்கும் ஜிப்ரான்!

Bookmark and Share

கமல் படங்களுக்கே முதலிடம் கொடுக்கும் ஜிப்ரான்!

விமல் நடிப்பில் சற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்துக்கு இசையமைத்தவர் ஜிப்ரான். அந்த படத்தில் இடம்பெற்ற அவரது பாடல்கள் சூப்பர் ஹிட்டானதால் அடுத்தபடியாக வத்திக்குச்சி, குட்டிப்புலி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்காஹ், அமரகாவியம் என பல படங்களுக்கு இசையமைத்தார்.

இந்த நிலையில், கமலையும் ஜிப்ரானின் இசை கவர்ந்து விட, தனது விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் படங்களில் இசையமைக்க வைத்தார். அதையடுத்து இப்போது கமல் நடிக்கும் தூங்காவனம் படத்திற்கும் இசையமைக்கிறார். இதன்பிறகும் கமலின் படங்களுக்கு அவர்தான் தொடர்ச்சியாக இசையமைப்பாளர் என்றும் தெரிகிறது.

இப்படி கமல் படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பதால் வேறு சில படங்களுக்கும் இசையமைக்க நேரமில்லாமல் திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறார் ஜிப்ரான்.  அவரிடத்தில், கமல் படங்களுக்கே முதலிடம் கொடுப்பது பற்றி யாராவது கேட்டால், கமல் சாரின் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது ரொம்ப பெரிய விசயம். அவருடன் இணைந்து இசையமைக்கும்போது அவரது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்.

அது எனக்கு பெரிய பயனாக இருக்கிறது. அந்த வகையில் கமல் சாருடன் இணைந்து செயல்படுவது எனக்கு பெரிய பலம் மட்டுமின்றி பெரிய அங்கீகாரமும்கூட என்கிறாராம் ஜிப்ரான்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions