6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் கமாலினி முகர்ஜி

Bookmark and Share

6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் கமாலினி முகர்ஜி

கமாலினி முகர்ஜி தமிழில், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் கமலுக்கு மனைவியாக இவர் நடித்திருந்தார். இவர் நடித்தது சிறிய கதாபாத்திரமே என்றாலும், தமிழ் ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு, மலையாள படங்களில் வாய்ப்பு கிடைக்க அதில், நடிக்கத் தொடங்கினார்.

இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக 2009-ஆம் ஆண்டு ‘காதல்னா சும்மா இல்ல’ என்ற படம் வெளிவந்தது. இதையடுத்து தற்போது 6 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார் கமாலினி. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் ‘இறைவி’ படத்தில் கமாலினி முகர்ஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

ஏற்கெனவே, இந்த படத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கருணாகரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே கூடியிருக்க, தற்போது கமாலினி முகர்ஜியும் இப்படத்தில் இணைந்திருக்கிறார். இப்படத்தில் அஞ்சலி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதால், கமாலினி, எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் கமாலினிக்கு இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பெற்றுக் கொடுக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


Post your comment





Related News
63-வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!
பெண் குழந்தையை ஈன்றெடுத்த நடிகை ராணி முகர்ஜி
தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
ராணி முகர்ஜிக்கு தேசிய விருது
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இல்லை:கமாலினி திடீர் பாய்ச்சல்
அதெப்படி ‘மர்தானி’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் தரலாம்... ராணி முகர்ஜி ஆவேசம்
ராணி முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்: குழந்தைகளுக்கு அமீர்கான் அட்வைஸ்
\'ராணி முகர்ஜி- ஆதித்யா சோப்ரா\' இத்தாலியில் திடீர் திருமணம்..!
அமிதாப்பச்சனுடன் சேர்ந்து படம் பார்த்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி..!
திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதா உட்பட 41 பேருக்கு பதக்கம் வழங்கிய குடியரசுத் தலைவர்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions