கமரக்கட்டு படத்தில் பள்ளிக்கூடகாதலை சொல்லவில்லை! -இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன்

Bookmark and Share

கமரக்கட்டு படத்தில் பள்ளிக்கூடகாதலை சொல்லவில்லை! -இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன்

ரிவேஸ் கிரியேசன்ஸ் தயாரித்துள்ள படம் கமரக்கட்டு. யுவன், ஸ்ரீராம், ரக்ஷா ராஜ், மனிஷாஜித் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆடியோ விழா , சென்னையில் நடைபெற்றது. அதையடுத்து மாலை 4 மணி அளவில் பிரஸ்மீட்  நடந்தது.

அதில் அப்படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது டைரக்டர் ராம்கி ராமகிருஷ்ணன் படம் பற்றி பேசும்போது, இப்படத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பசங்களின் நட்பு எத்தனை உறுதியாக இருக்கும் என்பதை சொல்லும் விதமாகத்தான் கமரக்கட்டு என்று டைட்டில் வைத்தேன்.

அதேசமயம் கமரக்கட்டை சரியாக கடிக்க வேண்டும். இல்லையேல் சில சமயங்களில் பல்லே உடைந்து விடும். அப்படிப்பட்ட தன்மை கொண்டது என்பதை சொல்லியிருக்கிறேன்.

மேலும், இந்த படத்தில் காதல் உள்ளது. ஆனால் டீப்பான லவ்  இல்லை.  காதல் என்பது ஒருவித மனமாற்றம் என்பதுபோல்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி கிளாமர் என்பது காஸ்டியூமில் மட்டும் இருக்கும். இந்த படத்தில் சித்தர் சம்பந்தப்பட்ட விசயங்களும் உள்ளது.

திருவண்ணாமலையில் படப்பிடிப்பு நடந்தபோது. ஆஞ்சநேயா கல் இருக்கும் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியபோது உயரத்தில் பறக்கவிடப்பட்ட சிறிய ரக கேமரா அந்த இடத்தில் அப்படியே நின்றது.

அதோடு, இந்த படத்தில் சிவனோடு அருள் சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கிறது. கமரக்கட்டு ருத்ராட்ச கொட்டை வடிவில் இருப்பதினாலும்தான் அதை டைட்டிலாக்கினேன்.

மற்றபடி இந்த கமரக்கட்டு படத்தில் பள்ளிக்கூட காதலை சொல்லவில்லை. ஒருவித மனமாற்றம். அதனால் ஏற்படும் முடிவுகளையே கதையாக சொல்லியிருக்கிறேன் என்றார் ராம்கி ராமகிருஷ்ணன்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
பிரபல நடிகருக்கு போன் செய்து வாழ்த்து கூறிய விஜய்- நடிகரே வெளியிட்ட தகவல்
ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகின்றது- இயக்குனர் யார் தெரியுமா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
காதல் கண்கட்டுதே ஹீரோவிற்கு திருமணம், பெண் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions