கிளி ஜோதிட காட்சியை மாற்றிய கமரக்கட்டு டைரக்டர்!

Bookmark and Share

கிளி ஜோதிட காட்சியை மாற்றிய கமரக்கட்டு டைரக்டர்!

நானும் என் காதலும் என் படத்தை இயக்கியவர் ராம்கி ராமகிருஷ்ணன். அதையடுத்து விவேக்கை வைத்து சொல்லி அடிப்பேன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் கிடப்பில் கிடக்கிறது.

இந்த நிலையில், சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம் கமரக்கட்டு. இந்த படத்தில் சாட்டை யுவன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் ஸ்ரீராம், மனீஷாஜித், ரக்ஷா ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

காதல், ஆன்மீகம் கலந்த ஒரு வித்தியாசமான கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. கூடவே நட்பின் ஆழம் பற்றியும் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர். மேலும், இந்த படத்தில் காதலர்கள் கிளி ஜோதிடம் பார்த்து தங்களது எதிர்காலத்தை தெரிந்து கொள்வது போன்று ஒரு காட்சி உள்ளதாம்.

முதலில் கிளியை வைத்தே அந்த காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்த ராம்கி ராமகிருஷ்ணன், பின்னர் பறவைகளை துன்புறுத்தப்பட்டதாக சொல்லி மிருக வதை சட்டம் பாயும் என்று அந்த கிளி ஜோதிடத்தை மாற்றி விட்டாராம். அதையடுத்து, கயிறு போட்டு அதில் படத்துடன் வரும் பலனை படிப்பது போன்று அந்த காட்சியை மாற்றினாராம்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
பிரபல நடிகருக்கு போன் செய்து வாழ்த்து கூறிய விஜய்- நடிகரே வெளியிட்ட தகவல்
ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகின்றது- இயக்குனர் யார் தெரியுமா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
காதல் கண்கட்டுதே ஹீரோவிற்கு திருமணம், பெண் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions