கமரகட்டு, டிமான்ட்டி காலனி படங்களில் ஆண் பேய்கள்!

Bookmark and Share

கமரகட்டு, டிமான்ட்டி காலனி படங்களில் ஆண் பேய்கள்!

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பேய் படங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையான பேய்ப்படங்களில் காஞ்சனா-2 போன்ற படங்கள் பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன.  

கடந்த வருடம் யாமிருக்க பயமே, அரண்மனை, பிசாசு ஆகிய பேய்ப்படங்கள் வெற்றி பெற்றன. இந்த வருடம் டார்லிங், காஞ்சனா 2 ஆகிய இரண்டுபேய்ப் படங்கள் பெரிய வசூல் செய்து தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும், தியேட்டர் அதிபர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

இவ்விரு படங்களுக்கும் ரசிகர்களும் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு படையெடுத்து வந்தனர். அந்த வரிசையில் இந்த வாரம்  அதாவது  நாளை மே 22 அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் டிமான்ட்டி காலனி படம் ரிலீஸாகிறது.

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அஜய் ஞானமுத்து இப்படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.  அருள்நிதியின் மோகனா மூவிஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

அடையாரில் உள்ள ஏரியா ஒன்றின் பெயரே டிமான்ட்டிகாலனி. அங்கேயுள்ள பங்களா ஒன்றில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம்.  

பொதுவாக, பேய் என்றாலே பெண்ணாகத்தான் இருக்கும். ஆனால், டிமான்ட்டி காலனி படத்தில் ஒரு ஆண் பேயாக வருகிறார். அதேபோல், கமரகட்டு படத்தில் யுவன், ஸ்ரீராம் ஆகிய இருவரும் பேயாக நடித்துள்ளனர்.


Post your comment





Related News
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
பிரபல நடிகருக்கு போன் செய்து வாழ்த்து கூறிய விஜய்- நடிகரே வெளியிட்ட தகவல்
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்
விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கிய அருண்ராஜா காமராஜுக்கு விருது!
வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்
கெளதம் மேனனை ரீ பிளேஸ் செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions