'காமராஜ்' திரைப்படத்துக்கு புதுவை அரசு ஆதரவு!

Bookmark and Share

'காமராஜ்' திரைப்படத்துக்கு புதுவை அரசு ஆதரவு!

2004-ல் வெளியான ‘காமராஜ்' திரைப்படம் புதிதாகப் படமாக்கப்பட்ட 20 காட்சிகளுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. தகவல் தொழில் நுட்பம், இணையம், சமூக ஊடகங்களை பயன்படுத்தி நாட்டின் வரலாற்றை தீர்மானிக்கும் இன்றைய நவீன இளைஞர்களிடம் பெருந்தலைவரின் அரசியல் பண்பை எடுத்துச்செல்வதே இந்தப் படத்தின் நோக்கம் என படத்தின் இயக்குநர் அ பாலகிருஷ்ணன் கூறினார்.

இணைப்புக் காட்சிகளில் காமராஜர் வேடத்தில் பிரதீப் மதுரம் நடித்துள்ளார். சுதந்திரப்போராட்ட தியாகியின் மகனாக இயக்குனர் சமுத்திரகனி நடித்துள்ளார். சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் வெளியீட்டுச் செலவு தொகை காமராஜர் ஆர்வலர்களிடம் திரட்டப்பட்டு வருகிறது.

இதன் ஓர் அங்கமாக பெருந்தலைவர் காமராஜரின் பக்தராக திகழும் புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களிடம் இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் உதவி கோரினார். திரைப்படத்துக்கு உதவி செய்வதாகவும், புதுவையில் திரையிட ஆவன செய்வதாகவும் முதல்வர் கூறினார். இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.


Post your comment





Related News
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
பிரபல நடிகருக்கு போன் செய்து வாழ்த்து கூறிய விஜய்- நடிகரே வெளியிட்ட தகவல்
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்
விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கிய அருண்ராஜா காமராஜுக்கு விருது!
வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்
காமராஜ் படத்தில் நடித்த சசிபெருமாளுக்கு இயக்குனர் இரங்கல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions