புதுப்பொலிவுடன் ஏப்ரலில் காமராஜ் ரிலீஸ்!

Bookmark and Share

புதுப்பொலிவுடன் ஏப்ரலில் காமராஜ் ரிலீஸ்!

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் காமராஜ். 2004ல் வெளியான இப்படம் 10 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் திரைக்கு வருகிறது. முன்னதாக, முந்தைய காமராஜ் படத்தில் சொல்லப்படாத மேலும் சில முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களையும் இந்த முறை அப்படத்தில் இணைத்து வெளியிடுகிறார்களாம்.

ஏற்கனவே காமராஜர் வேடத்தில் பிரதீப் மதுரம் மற்றும் சாருஹாசன், வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்துள்ள அப்படத்தில் இப்போது சுதந்திர போராட்ட தியாகி ஒருவரின் மகன் கேரக்டரையும் இணைத்துள்ளார்கள்.

அந்த வேடத்துக்கு இப்போதைய நடிகர்கள் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று பரிசீலனை செய்தபோது டைரக்டர் சமுத்திரகனி கச்சிதமாக இருப்பார் என்று முடிவெடுத்து அவரிடம் அதுபற்றி பேசினார்களாம்.

ஏற்கனவே காமராஜ் படத்தின் மீது ஈர்க்கப்பட்டிருந்த அவர், தான் நடிப்பதற்கு உடனே சம்மதம் சொல்லி நடித்து கொடுத்துள்ளார். அந்த வகையில், சமுத்திரகனியின் கேரக்டர் இப்படத்தில் 20 நிமிடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் புரொடக்சன்ஸ், டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட எல்லாம் பணிகளும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions