மாணவர்களை தவறாக காட்டவில்லை: கமர்கட்டு இயக்குனர் விளக்கம்

Bookmark and Share

மாணவர்களை தவறாக காட்டவில்லை: கமர்கட்டு இயக்குனர் விளக்கம்

எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளரும், ஆர்ட் டைரக்டருமான எஸ்.ஏ.சி.ராம்கி இயக்கி உள்ள படம் கமர்கட்டு.

சாட்டை யுவன், கோலிசோடா ஸ்ரீராம், லக்ஷாராஜ், மனீஷா ஜித் நடித்துள்ளனர். இந்த படத்தில் பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையுடன் டூயட் பாடுவது போன்ற காட்சிகளும் காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. ஆனால் மாணவர்களை தவறாக சித்தரிக்கவில்லை என்கிறார் இயக்குனர் ராம்கி. 

அவர் மேலும் கூறியதாவது: கமர்கட்டு ஒரு வித்தியாசமான பண்டம், நல்ல இனிப்பு மிக்கது, ஆனால் பக்குவமாக சாப்பிடாவிட்டால் பல் உடைந்து விடும்.

அது மாதிரிதான் பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரிக்கு செல்லும் பருவம் இனிப்பு மிக்கது. அதை பக்குவமாக பயன்படுத்தாவிட்டால் வாழ்க்கை சீரழிந்து விடும்.

ஒரே பள்ளியில் நடிக்கும் அக்கா தங்கைகள் இருவருக்கும் அந்த வயதுக்கே உரிய ஈர்ப்பு சக மாணவர்கள் மீது வருகிறது. அந்த வயதில் அவர்கள் எடுக்கும் ஒரு முடிவு வாழ்க்கையை தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது.

அதலிருந்து அவர்களை காப்பாற்றுவது கடவுள் சக்தி மட்டும்தான். அந்த கடவுள் சக்தியை அவர்கள் எப்படி பெற்றார்கள். எப்படி பிரச்னையிலிருந்து அந்த சக்தி அவர்களை மீட்டது என்பதுதான் கதை.

இதற்கு முன் வந்த பல படங்கள் பள்ளி மாணவர்கள் காதலிப்பது போன்றும், ஓடிப்போவது போன்றும், தப்பு செய்வது போன்றும் வந்திருப்பதால் இந்த படத்தை அப்படி சந்தேகிக்கிறார்கள். மாணவர்களை தவறாக சித்தரிக்கும் ஒரு காட்சிகூட படத்தில் கிடையாது என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions