கன்னட ரீமேக் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் சமந்தா!

Bookmark and Share

கன்னட ரீமேக் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் சமந்தா!

இந்த வருடத்தில் ‘தெறி’, ‘24’ என வெற்றிப்படங்களை கொடுத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சமந்தா. இதனால், தற்போதைக்கு இரண்டு மாதங்கள் படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிறகு அடுத்த படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். தற்போதைக்கு, தமிழில் ‘வடசென்னை’ படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், பிற மொழிகளில் நல்ல கதாபாத்திரங்களில் உள்ள கதைகளை கேட்டும் வருகிறார். இந்நிலையில், கன்னடத்தில் ‘லூசியா’ படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்த ‘யு டர்ன்’ படத்தின் கதை சமந்தாவை மிகவும் கவர்ந்துள்ளதாம். கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள திரில்லர் கதை அம்சத்துடன் வெளிவந்த இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்கில் சமந்தா நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

இதில் சமந்தா நடிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தை அவரே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions