கங்கனாவின் புதிய அவதாரம்

Bookmark and Share

கங்கனாவின் புதிய அவதாரம்

சிறந்த நடிகைக்கான தேசிய விருது, தானு வெட்ஸ் மானு படத்தின் வெற்றி என பாலிவுட் திரையுலகில் படுபிஸியாக உள்ள கங்கனா ரனாவத், தான் நடித்து விரைவில் வெளிவர உள்ள கட்டி பட்டி படத்தின் முதல் 7 நிமிட காட்சிகளை, கங்கனா ரனாவத்தே இயக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில், கங்கனாவிற்கு ஜோடியாக இம்ரான் கான் நடிக்கிறார். கங்கனா இயக்கியுள்ள படத்தின் துவக்க காட்சிகளில், இம்ரான் கானும், கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளனர். கங்கனா இயக்கத்தில் உருவான காட்சிகள் அனைத்தும் சிங்கிள் டேக்கில் எடு்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கங்கனா கூறியதாவது, படத்தின் கதையின் தேவையின்படியே, தான் இயக்கத்தை மேற்கொண்டதாகவும், இயக்குநர் நிகில் அத்வானி, ஒளிப்பதிவாளர், சக நடிகர்கள் உள்ளிட்ட படக்குழு அனைவரும் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர் என்று கங்கனா ரனாவத் கூறினார்.

கங்கனா ரனாவத், இப்படத்தில் வழுக்கைத்தலை கேரக்டரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions