'கனவு வாரியம்'... வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம்!

Bookmark and Share

'கனவு வாரியம்'... வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம்!

ஹாலிவுட்டின் டாப் சினிமா நிறுவனங்களுள் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தை வெளியிடுகிறது. அதுதான் கனவு வாரியும்.

தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு டிசிகாப் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், வெளியாவதற்கு முன்பே 7 சர்வதேச விருதுகளையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச அங்கீகாரங்களையும், வென்றுள்ளது.

உலகப் புகழ்ப் பெற்ற 2 சர்வதேச 'ரெமி' விருதுகளை வென்ற முதல் இந்தியப் படம் 'கனவு வாரியம்'. 'ரெமி' விருதை இதற்கு முன் வென்றவர்கள் 'ஜூராஸிக் பார்க்' படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், 'லைப் ஆப் பை' படத்தை இயக்கிய ஆங் லீ, 'கிளேடியேட்டர்' படத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட் உள்ளிட்டோர்.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் டென்சில் டயஸ் கூறுகையில், "கனவு வாரியம் திரைப்படம் எளிய மக்களின் வாழ்வியலை சுவாரசியமாக பேசும் சமூகத்திற்கான படம் மட்டும் அல்ல... இது நம்பிக்கையை விதைக்கும் படமும் கூட," என்றார்.

'கனவு வாரியம்' திரைப்படத்தில் ஜியா (அறிமுக கதாநாயகி), இளவரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, யோக் ஜெப்பி, செந்தி குமாரி உட்பட பலர்நடித்துள்ளனர்.

இசை - ஷியாம் பெஞ்சமின், ஒளிப்பதிவு - எஸ்.செல்வகுமார். இயக்குநர் அருண் சிதம்பரம் அமெரிக்காவில் பிஇ, எம்எஸ் படிப்பை முடித்துவிட்டு சர்வதேச வங்கியான 'ஜே பி மார்கன் சேஸில்' (சிகாகோ) பணிபுரிந்தார். சினிமாவின் மீதுள்ள காதலால் இலட்சங்களில் சம்பாதிக்கும் வேலையைவிட்டு விட்டு சென்னை வந்து 'கனவு வாரியம்' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

அருண் சிதம்பரம், பிரபல உடற்பயிற்சி நிபுணர் 'ஆணழகன்' சிதம்பரத்தின் இளைய மகன்.

Post your comment

About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions