கஞ்சா கருப்பு - மலையன் கோபி சமாதானம்!

Bookmark and Share

கஞ்சா கருப்பு - மலையன் கோபி சமாதானம்!

கஞ்சா கருப்பு கதையின் நாயகனாக நடித்த படம் வேல்முருகன் போர்வெல்ஸ். இந்த படத்தில் அங்காடித்தெரு மகேஷ்-ஆருஷி, ரகசியா உள்பட பலர் நடித்திருந்தனர். மலையன் கோபி இப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் படம் விற்பனையாகவில்லை.

அதன்பிறகு அவர்களே படத்தை ரிலீஸ் செய்தனர். படம் ஓரிரு நாட்கள்கூட ஓடவில்லை. இதனால் படத்தை தயாரித்த கஞ்சா கருப்பு, மலையன் கோபி இருவருமே நஷ்டமடைந்தனர். இருப்பினும், அந்த படத்துக்காக தான் நிலத்தை அடமானம் வைத்துக்கொடுத்த 30 லட்சத்தை டைரக்டர் கோபியிடம் கேட்டார் கஞ்சா கருப்பு. அவரோ, இப்போதைக்கு முடியாது என்று கூறி வந்திருக்கிறார்.

இதையடுத்து, சென்னையில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் மலையன் கோபி மீது புகார் அளித்தார் கஞ்சா கருப்பு. பின்னர், இந்த விசயம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்றது. அவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது, வேல்முருகன் போர்வெல்ஸ் படத்துக்காக மலையன் கோபி 60 லட்சமும், கஞ்சாகருப்பு 30 லட்சம் செலவு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆக, அந்த படத்தினால் இரண்டு பேருக்குமே நஷ்டம் ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

இருப்பினும், கஞ்சா கருப்புவிடம் படம் முடிந்ததும் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கோபி சொன்னதை மனதில் கொண்டு அடுத்தபடியாக அவர் படம் இயக்கி அந்த தொகையை தருவார் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கு இரண்டுபேருமே ஒத்துக்கொண்டதை அடுத்து சில மாதங்களாக கஞ்சாகருப்பு-மலையன் கோபிக்கிடையே நடந்து வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions