லாரன்ஸின் காஞ்சனா-2, ஏப்ரல் 16ம் தேதி ரிலீஸ்

Bookmark and Share

லாரன்ஸின் காஞ்சனா-2, ஏப்ரல் 16ம் தேதி ரிலீஸ்

லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து இயக்கிய முனி படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை காஞ்சனா என்ற பெயரில் எடுத்தார். அதுவும் வெற்றிகரமாக ஓடியதால் இதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்தார். இதற்கு முனி 3 கங்கா என முதலில் பெயரிடப்பட்டது.

இதன் பெயரிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் தலைப்பை காஞ்சனா-2 மாற்றியிருக்கிறார்கள். காஞ்சனா படத்திற்கும் காஞ்சனா- 2 படத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்றும் முற்றிலும் மாறுபட்ட கதை என்றும் ராகவா லாரன்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் நான்கு நாட்களில் இப்பணிகள் முடிவடையவுள்ளது. இதையடுத்து இப்படத்தை ஏப்ரல் 16ம் தேதி வெளியிடவுள்ளனர்.

அதிக பொருட்செலவில் திகில் படமாக தயாராகியுள்ள இப்படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன் தயாரித்து, சன் பிக்சர்ஸ் வழங்க, உலகம் முழுவதும் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. 

 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions