ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் கற்ற அனுபவப்பாடம்...!

Bookmark and Share

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் கற்ற அனுபவப்பாடம்...!

2015 தொடங்கியதிலிருந்து வாரம் வாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவற்றில் வெற்றிபெறும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையிலேயே அரை டஜன் படங்கள் வெளியாகி உள்ளன. வரும் வாரங்களிலும் இதேபோல் நிறைய படங்கள் வெளிவர உள்ளன. மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தமவில்லன், நண்பேன்டா, கொம்பன், இது நம்ம ஆளு என பல பெரிய படங்களும் வரிசையில் உள்ளன. இந்தப்படங்களுக்கு வழிவிட்டு பல படங்கள் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துவிட்டன.

ஆனால், ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 2 படம் தைரியமாக களத்தில் இறங்குகிறது. இப்படத்தை ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். முனி படத்தின் மூன்றாம் பாகமாக ராகவா லாரன்ஸ் இயக்கி வந்த கங்கா படத்திற்கு சமீபத்தில் காஞ்சனா 2 என்று பெயர் வைத்தார்.  

ராகவா லாரன்ஸ் முக்கிய கேர்கடரில் நடித்து இயக்கும் இப்படத்தில் டாப்சி, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர். காஞ்சனா 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  

காஞ்சனா 2 படத்தை தமிழகம் முழுக்க ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் சார்பில் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி வெளியிடுகிறார். கோடைவிடுமுறையில் படத்தை வெளியிட்டால் ஜாக்பாட் அடிக்கலாம் என்பது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் கற்ற அனுபவப்பாடம்.

அந்த அடிப்படையிலேயே காஞ்சனா 2 படத்தை வெளியிட ஏப்ரல் 10 ஆம் தேதியை தேர்வு செய்துள்ளாராம்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions