ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்த காஞ்சனா 2

Bookmark and Share

ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்த காஞ்சனா 2

லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா–2’ பேய் படம் வசூல் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது. இந்த வருடத்தின் மெகா ஹிட் படமாக இது அமைந்துள்ளது.

இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் ரிலீசானது. காஞ்சனா படத்தின் 2–ம் பாகமாக வந்தது. டாப்சி, நித்யா மேனன் நாயகிகளாக நடித்து இருந்தனர். ‘காஞ்சனா 2’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன. மெகா பட்ஜெட் படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வசூலில் சக்கை போடு போட்டது.

தற்போது இப்படம் 50 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.108 கோடி வசூலித்து சாதனை படைத்து உள்ளது.

இதுகுறித்து நடிகர் லாரன்ஸ் கூறும்போது, ‘‘குறைந்த பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்தோம். தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த படத்தில் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் கடும் உழைப்பை இந்த படத்துக்கு கொடுத்தோம்.

எங்கள் உழைப்பு வீணாகவில்லை. எங்கள் தொழில் பக்திக்கு கிடைத்த கடவுளின் அனுக்கிரஹமாகவே இந்த வெற்றியை பார்க்கிறேன். படத்தில் பணியாற்றியவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions