மே 1 ரிலீஸ், தடுமாறும் தியேட்டர்கள்

Bookmark and Share

மே 1 ரிலீஸ், தடுமாறும் தியேட்டர்கள்

ஒரு படம் நல்ல விதத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது அந்தப் படத்தைத் தூக்கிவிட்டு வேறு எந்த புதுப்படத்தையும் வெளியிட தியேட்டர்காரர்கள் தயங்குவார்கள். அப்படி ஒரு நிலைமை மே 1ம் தேதி வர உள்ளது.

கடந்த 17ம் தேதி வெளியான 'காஞ்சனா 2' படம் பி அன்ட் சி ஏரியாக்களில் வசூலைக் குவித்து ஓடிக் கொண்டிருக்கிறது. மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' ஏ சென்டர்களில் அமோக வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களில் இந்த இரண்டு படங்கள்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இரண்டு வாரங்கள் நெருங்கியும் திரையிட்ட பல திரையரங்குகளில் வசூல் குறையாத நிலையில் அந்த இரண்டு படங்களையும் தூக்கி விட்டு “உத்தம வில்லன், வை ராஜா வை” ஆகிய படங்களைத் திரையிட தியேட்டர்காரர்கள் தயங்குவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெகு நாட்கள் கழித்து தற்போதுதான் தியேட்டர்கள் 'கொம்பன்' படத்திலிருந்தே ஓரளவுக்கு  நல்ல வசூலை சம்பாதித்து வருகின்றன. இப்படி அடுத்தடுத்த வாரங்களில் பெரிய படங்கள் வருவதால் எந்தப் படத்தைத் திரையிடுவது என்று தியேட்டர்காரர்கள் தடுமாற ஆரம்பித்துள்ளார்களாம்.

ஒவ்வொரு ஊரிலும் பெரிய படங்களை முக்கிய தியேட்டர்களில் வெளியிடவே தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் விரும்புவார்கள். மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படங்களை சிறிய தியேட்டர்களுக்கு மாற்றி விட்டு, 'உத்தம வில்லன்' படத்தைத் திரையிட்டு விடுவார்கள்.

ஏனென்றால், அது கமல்ஹசான் படம். ஆனால், 'வை ராஜா வை' படத்திற்குத்தான் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது என்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 200க்கும் குறைவான தியேட்டர்கள்தான் அந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions