காஞ்சனா 2... லாரன்ஸ் 'பேயி'ன் ஃபர்ஸ்ட் லுக் பாக்கறீயளா..?

Bookmark and Share

காஞ்சனா 2... லாரன்ஸ் 'பேயி'ன் ஃபர்ஸ்ட் லுக் பாக்கறீயளா..?

ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி படம் செம த்ரில்லிங் என்றாலும், அன்றைக்கு எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தொடர்ச்சி என்ற பெயரில் இயக்கி வெளியிட்ட காஞ்சனா, சக்கைப் போடு போட்டது. பேய்ப் பட வரிசையில் அந்தப் படம் புது ட்ரெண்டை உருவாக்கியது என்றாலும் மிகையல்ல.

இப்போது காஞ்சனாவின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் லாரன்ஸ்.இந்தப் படத்துக்கு முதலில் முனி 3 என்றுதான் பெயரிட்டிருந்தனர். பின்னர் அந்தப் பெயரை காஞ்சனா 2 என்று மாற்றிவிட்டதாக லாரன்ஸ் அறிவித்தார்.

இப்போது படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. உடம்பு முழுக்க மஞ்சள் பூசி, நெற்றியில் திருநீற்றுப் பட்டை தீட்டி ஆக்ரோஷப் பார்வையுடன் காட்சி தருகிறார் லாரன்ஸ் 'பேய்'.

முனியின் தொடர்ச்சிதான் காஞ்சனா, காஞ்சனா 2 என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், இந்த மூன்று படங்களின் கதைகள் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாதவையே. லாரன்ஸ் பயந்தாங்கொள்ளி, அவரைப் பேய் பிடிக்கும், அவருக்கு அம்மா கோவை சரளா ஆகிய மூன்று விஷயங்கள் மட்டும்தான் இந்த மூன்று கதைகளிலும் தொடர்ச்சியாக உள்ளது.

இந்தப் படத்தை ராம நாராயணனின் மகன் தனது தேனாண்டாள் பிலிம்ஸ் மூலம் வெளியிடுகிறார். சன் பிக்சர்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை வழங்குகிறது.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions