ஏப்ரல் 10 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது காஞ்சனா 2

Bookmark and Share

ஏப்ரல் 10 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது காஞ்சனா 2

நடன இயக்குநராக இருந்த ராகவேந்திரா லாரன்ஸ் இயக்குநர் அவதாரம் எடுத்து இயக்கிய படம் - முனி. இந்தப் படத்தைத் தயாரித்தவர் இயக்குநர் சரண்.

அமர்க்களம் படத்தில் மகா கணபதி என்ற பாடலில் ராகவேந்திரா லாரன்ஸை நடன நடிகராக அறிமுகம் செய்தவர் சரண்தான். அவரே ராகவேந்திரா லாரன்ஸை இயக்குநராக தமிழில் அறிமுகம் செய்தார். ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கிய முனி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அதனைத் தொடர்ந்து முனி படத்தின் இரண்டாம் பாகமாக காஞ்சனா என்ற படத்தை இயக்கினார். இந்தப்படமும் ஹிட்டானது. முனி படத்தின் 3 ஆம் பாகமாக ஒரு படத்தை கடந்த ஆண்டு ஆரம்பித்தார்.

படத்தை தொடங்கியதிலிருந்தே  ஏகப்பட்ட தடங்கல்கள். என்ன காரணம் என்று யோசித்த ராகவேந்திரா லாரன்ஸ், தடங்கலுக்குக் காரணம் படத்தின் தலைப்புதான் என்று முடிவு செய்து முனி-3 என்ற தலைப்பை காஞ்சனா-2 என்று மாற்றினார்.

பெயரை மாற்றிய நேரமோ என்னவோ...காஞ்சனா-2 படத்துக்கு விமோசனம் கிடைத்துள்ளது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி உள்ளது.  ஏப்ரல் 10 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது காஞ்சனா 2 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions