மே 1ஆம் தேதி முதல் தெலுங்கிலும் காஞ்சனா -2

Bookmark and Share

மே 1ஆம் தேதி முதல் தெலுங்கிலும் காஞ்சனா -2

கடந்த 17ஆம் தேதி வெளியான 'காஞ்சனா 2' தமிழகத்தில் அனைத்து ஏரியாக்களிலும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதே நாளில் 'காஞ்சனா 2' வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' படத்தை தெலுங்கிலும் வெளியிட முயற்சி செய்தனர்.

ராகவா லாரன்ஸ் மீது தெலுங்கு திரைப்படத்துறையில் ஒரு பஞ்சாயத்து இருப்பதால் காஞ்சனா - 2 படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்ய முடியாமல்போனது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி தமிழில் வெளியான 'காஞ்சனா 2' படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததினால், வரும் மே 1ஆம் தேதி தெலுங்கில் வெளியாகி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை ஒரு கை பார்க்கவிருக்கிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில் டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, ரேணுகா, ஸ்ரீமன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.  இப்படம் வெளியான முதல் 10 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டும் 35 கோடிகளை வாரிக்குவித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மீதான விசயத்தில் சமரசம் எற்பட்டத்தை அடுத்து, 'காஞ்சனா 2' வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.

லாரன்ஸ், டாப்ஸி, கோவை சரளா ஆகியோருக்கு தெலுங்கில் பெரிய வரவேற்பிருப்பதோடு, ஏற்கெனவே முனி, காஞ்சனா என இரண்டு படங்களும் அங்கேயும் ஹிட்டாகியிருப்பதால் முனி 3 ஆம் பாகமான 'கங்கா' விற்கு ஆந்திராவிலும் பெரிய எதிர்பார்ப்பு  நிலவி வருகிறது.

முன்னணி தமிழ் ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு இணையாக பெரிய விலைக்கு  'கங்கா' படத்தை விற்றிருகிறார்கள்.

 


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions