காஞ்சனா-2 படத்தை பாராட்டுவதா? ஷங்கரை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

Bookmark and Share

காஞ்சனா-2 படத்தை பாராட்டுவதா? ஷங்கரை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

ரிலீஸாகும் படங்களைப் பற்றி ஃபேஸ்புக், ட்விட்டர்  சமூக வலைதளங்களில் அவ்வப்போது கருத்து சொல்வார் இயக்குநர் ஷங்கர். காவியத்தலைவன் படத்துக்குப் பிறகு நீண்ட நாட்களாக எந்தப் படத்தைப் பற்றியும் கருத்து வெளியிடாமல் இருந்த இயக்குநர் ஷங்கர் ஃபேஸ்புக்கில் லேட்டஸ்ட்டாக ரிலீஸ் ஆகி உள்ள காஞ்சனா - 2 படம் பற்றிய ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்திருக்கிறார்.  

ராகவா லாரன்ஸ் இயக்கி, வித்தியாசமான பல வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை சமீபத்தில்தான் இயக்குநர் ஷங்கர் பார்த்துள்ளார். இதுகுறித்து, 'காஞ்சனா -2'  படம் பார்த்தேன்.

கோவை சரளாவின் காமெடி ஃபெர்மான்ஸை மிகவும் ரசித்துப் பார்த்தேன். பல திறமைகளைக் கொண்ட ராகவா லாரன்ஸின் நடிப்பு அபாரம். குறிப்பாக பாடல் ஒன்றில் வரும் சின்னப் பெண் கெட்அப்பில் அசத்தியிருக்கிறார்! என ஸ்டேட்டஸ் அப்டேட் செய்துள்ளார் ஷங்கர்.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பிரம்மாண்டமாக படங்கள் எடுத்தாலும் அடிப்படையில் ஷங்கர் மசாலாப்படங்களை விரும்பிப்பார்ப்பவர். அதைவிட காமெடி படங்கள் மிகவும் விரும்பிப்பார்ப்பவர்.

இதை அவரே பல தடவை சொல்லி இருக்கிறார். எனவே காஞ்சனா-2 படம் ஷங்கருக்குப் பிடித்ததில் ஆச்சர்யமில்லை. ஷங்கரின் டேஸ்ட் அறியாத சிலர் காஞ்சனா-2 படத்தைப் பாராட்டியதால் பேஸ்புக் ட்விட்டரில் ஷங்கரை நக்கல் அடிக்கின்றனர்.

 


Post your comment





Related News
இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?
கோலிவுட்டை அதிர வைத்த இந்தியன்-2 பட்ஜெட் - இத்தனை கோடியா?
2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு
பாகுபலி படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்!! 2.0'வை விட பிரம்மாண்டமா?
டெல்லி ஷெட்யூல் முடிந்தது சென்னையில் 2.0 ஷூட்டிங்
பல வெளிநாட்டு மொழிகளில் ரீமேக் ஆகும் காஞ்சனா
மழையால் தாமதமான எந்திரன் 2 அறிவிப்பு
'லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எந்திரன் 2.. உறுதி செய்த அய்ங்கரன் கருணா!
எந்திரன் – 2 : ரஜினியின் டூப்புக்கு மேக்கப் டெஸ்ட்
'எந்திரன் 2' படத்திற்கு அர்னால்டு வைத்த செக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions