தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்

Bookmark and Share

தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.

அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை ஏப்ரல் 19-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக படம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசாகும் என்று கூறப்பட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions