பிரமாண்டமாக நடைபெறவுள்ள கஞ்சே பாடல்கள் வெளியீட்டு விழா

Bookmark and Share

பிரமாண்டமாக நடைபெறவுள்ள கஞ்சே பாடல்கள் வெளியீட்டு விழா

டோலிவுட்டில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படமான கஞ்சே படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் விநாயக சதுர்த்தியான செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பர்ஸ்ட் பிரேம்ஸ் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள கஞ்சே படத்தில் நாயகனாக வருண் தேஜ் நடித்துள்ளார். 

இரண்டாம் உலக போரின் பின்னணியில் நடக்கும் இப்படத்தின் திரைக்கதை காதலையும் மையப்படுத்தியுள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளிவந்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விசாகப்பட்டினத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில்  படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டோலிவுட்டின் பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions