கந்தசாமி நொந்தசாமி ஆன கதை இப்படித்தான்

Bookmark and Share

கந்தசாமி நொந்தசாமி ஆன கதை இப்படித்தான்

விக்ரம் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகிய படம் கந்தசாமி. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, சுசிகணேசன் இயக்கியிருந்தார்.

தற்போது எப்படி கபாலி விளம்பரம் இருந்ததோ, அதேபோல் அப்போதே அசத்தினார் தாணு, பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் கார்டிலேயே படத்தின் ட்ரைலர் ஓடுவது போல் அமைத்தார்.

இப்படத்தில் நடிகர் விவேக் நடிப்பது போல் முன்பு ஒரு சில காட்சிகள் எடுத்தார்கள், பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை படத்திலிருந்து விவேக் விலகினார்.

பிறகு நடிகர் சந்தானம் நடித்தும் ஒரு சில காட்சிகள் எடுக்க, அவரும் படத்திலிருந்து விலகினார்.

என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, கடைசியாக படத்தில் காமெடி வேண்டும் என்பதற்காக வடிவேலுவை தனியாக ஷுட் செய்து படத்தில் ஒட்டினார்கள்.

கதைக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாமல் இவருடைய காமெடி காட்சிகள் வந்து செல்லும், இப்படி பணத்தை இப்படத்தில் தண்ணியாக கொட்டினார் தாணு.

படத்தின் ஓப்பனிங்கும் பிரமாண்டமாக தான் இருந்தது, அத்தனை கோடி, இத்தனை கோடி என வழக்கம் போல் கதை கட்டினாலும், இப்படத்தினால் பலருக்கும் பல கோடி நஷ்டம் தான்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions