அப்துல்கலாம் கனவை விதைக்க ஆவணப்படம் தயாரிப்பு: கங்கை அமரன் தகவல்

Bookmark and Share

அப்துல்கலாம் கனவை விதைக்க ஆவணப்படம் தயாரிப்பு: கங்கை அமரன் தகவல்

ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் இசை அமைப்பாளர் கங்கை அமரன், ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் ஆடலரசன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, காந்தி கண்ணதாசன், ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் கங்கை அமரன் கூறியதாவது:– 

இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக சிந்தித்து மாணவர்கள், இளைஞர்களை லட்சிய கனவு மூலம் உயர்த்த பாடுபட்ட மாமனிதர் அப்துல் கலாம். உலக நாடுகளின் பிரச்சனைக்கு அறிவுரை வழங்கிய அவர் உலக ஜோதியாக உருவாகி உள்ளார். 

கவிஞர் கண்ணதாசனின் 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்' என்ற பாடல் அப்துல்கலாம் பெயரை உச்சரிக்கும். இது அவருக்கு பொருத்தமான பாடலாக அமைந்துள்ளது. அவர் மறையவில்லை. நம்மிடம்தான் உள்ளார். 

அவரது லட்சிய பயணத்தை தொடர லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் உறுதி எடுத்துள்ளார்கள். கலாம் கனவை விதைக்க திரைப்படத்துறையினர் ஆவணப்படம் உருவாக்கி வருகின்றனர். அதை இந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஒளிபரப்ப மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

கண்ணதாசன் பதிப்பக வெளியீட்டாளரான காந்தி கண்ணதாசன் கூறுகையில், கலாம் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் இந்தியா முன்னேறவும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தது. 

அக்னி சிறகுகள் புத்தகம் 9 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அவர் கடைசியாக எழுதிய "உங்களது வருங்காலத்தை செதுக்குங்கள்" என்ற புத்தகம் வெளிவரவில்லை. அது விரைவில் வெளியிடப்படும் என்றார்.


Post your comment

Related News
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா?: கங்கை அமரன் பேட்டி
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், எந்த கட்சியில் தெரியுமா?
வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!
பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்!- கங்கை அமரன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions